Tuesday, 27 October 2015

Burnt by the Sun​(1994): சூரியனால் சுட்டெரிக்க பட்டவர்கள்


Burnt by the Sun(1994): சூரியனால் சுட்டெரிக்க பட்டவர்கள்


முதலில் ஒன்றை தெரிவித்து கொள்கிறேன். இந்த படத்தை பற்றி தமிழில் எழுதும் முதல் நபர் நான் தான்.




சினிமா என்பது பொய்யும் பேசும், உண்மையும் பேசும். வரலாற்று ஆசிரியர்களை போன்றதுதான் சினிமா. அவர்களுக்கு பிடித்தவாறு சமைக்க படுகிறது. இப்படி சொல்வதால், இந்த படத்தை பற்றி நான் கழுவி கழுவி ஊற்ற போவதாக யாரும் எண்ண வேண்டாம். படத்தை படமாக பாப்போம். வரலாற்று பாடமாக அல்ல.

இது ஒரு ரஷ்ய படம். 3 வருடங்களாக இதை காண வேண்டும் என்கிற ஆசை இந்த வாரம்தான் கைகூடியது. படம் வெளிவந்த ஆண்டு, 1994. அதாவது, சோவியத் ரஷ்ய சிதைந்து வெறும் ரஷ்ய ஆன பிறகு. ஊழல் மிகுந்த முதலாளித்துவ ரஷ்யவாக அது மாறிய பிறகு. அப்படிப்பட்ட சமயத்தில் வந்த ஒரு சரித்திர திரைப்படம்தான் "சூரியனால் சுட்டெரிக்க பட்டவர்கள்" என பொருள்படும் Burnt by the Sun. படம் ரஷ்ய ஸ்டாலின் ஆட்சியை விமர்சிப்பதாலோ என்னவோ (என்னவோ என்ன? அதுதான்) இதற்க்கு சிறந்த அயல் நாட்டு சினிமாவுக்கான ஆஸ்கரை அமெரிக்கா வழங்கியது.

படத்தை இயக்கி முக்கிய கதாபத்திரத்தில் நடித்திருப்பவர் நிகிடா மிக்கலோவ் என்பவர். இவர் ஒரு ஒளிபதிவாளரும் கூட. ஆனால், இந்த படத்துக்கு இவர் ஒளிப்பதிவு செய்யவில்லை. படத்தில் இவருடைய சொந்த மகளே மகளாக நடித்துள்ளார். அதனால் இவர்கள் இருவருக்கிடையான காட்சிகள் கவிதையாக வந்துள்ளன.


கதைக்கு செல்வோம்.

அது ஒரு கோடை காலம். வருடம் 1936. 

ராணுவ அதிகாரி கோடோவ், ஒரு போர் வீரர். தனது மனைவி மற்றும் குழந்தையுடன் கோடையை கழிக்க பான்யா என்ற இடத்திற்கு வந்துள்ளார். அதே இடத்திற்கு அவர் மனைவியுடைய பழைய காதலனும் வருகிறான். திரும்பி வந்துள்ள காதலனை கோடோவ் குடும்பம் விருந்தோம்பலுடன் நன்றாக கவனிக்கிறது. இந்த சமயத்தில்தான் ஒரு ரகசியம் வெளிவருகிறது. வந்தவனுடைய நோக்கம் மனைவியை காண்பதல்ல. கணவனை கைது செய்வது!

ஏன்? எதற்கு? எதனால்?

கோடோவ் ரஷ்ய சர்வாதிகாரி ஸ்டாலினை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக. ஆனால், இது நிருபிக்கப்படாத ஒன்று.

ஒரு கட்டத்தில், மித்யா என்கிற அந்த பழைய காதலன், இது பற்றி கொடோவிடம், "உன்னால்தான் நான் ராணுவத்தில் வலுகட்டாயமாக வேறு பிரிவுக்கு மாற்றப்பட்டேன். அந்த சமயத்தில் நீ என் காதலியையும் அடைத்துவிட்டாய். இனி எனக்கு வாழ்க்கையே இல்லாமல் செய்துவிட்டாய். உன்னை பழிவாங்காமல் விடமாட்டேன்" என்பான்.

அதற்க்கு கோடோவ் அவன் முகத்தில் ஒரு குத்து விட்டு, "நீ ஒரு வேசி. பாரிசில் நம் படையினறியே காட்டி கொடுத்தவன் தானே. உன்னை நான் நம்ப மாட்டேன். என்ன இருந்தாலும் ஸ்டாலினுடனான என் நட்பு நாடறிந்தது. எனக்கு எதுவும் ஆகாது" என பதிலுக்கு திட்டுகிறார். இவர்களின் பேச்சுக்கு இடையில் வரும் கோடோவ்-வின் மகள் நதியாவிடம் இருவரும் நண்பர்கள் போல நடிக்கின்றனர். பிறகு கோடோவ் ரகசியமாக மித்யாவிடம் மீண்டும் கேட்கிறார்: "நாளைக்கா? சரி பார்ப்போம்". 

மறுநாள், போர் வீரரான கோடோவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அந்த ஊர் மாணவர்கள் வருகின்றனர். அப்போது அங்கே அவரை கைது செய்ய ஸ்டாலினின் ஆட்கள் வருகின்றனர். தர்ம சங்கடமான நிலையில், குடும்பத்தினரிடம் பொய் சொல்லிவிட்டு காரில் ஏறுகிறார் கோடோவ்.

காரில் ஏறிய கணம் முதல் ஏதோ உல்லாச பயணத்திற்கு செல்பவரை போல, "சரி, அடுத்து நாம் எங்கே செல்கிறோம் ஹோடெளுக்கா.." யாரும் பதில் அளிக்கவில்லை. "ஸ்டாலினை சந்தித்த உடன் முதலில் உங்களை பணி நீக்கம் செய்ய சொல்ல போகிறேன்", என்றெல்லாம் வீர வசனம் பேசுவார்.

பிறகு வழி நடுவே யாரோ விவசாயி ட்ராக்டரை நிறுத்தி வைத்திருப்பான். அவனிடம் மித்யா விசாரித்ததில் வண்டி கோளாறு என்பான். இந்த இடைபட்ட நேரத்தில் கோடோவ் காரில் இருந்து தப்பிக்க முயல்கிறார். அங்கே உள்ளே சண்டை நடக்க வெளியே மித்யா விவசாயியை வண்டியை நெருங்க விடாமல் தடுக்கிறான். சத்தத்தை கேட்ட விவசாயி "அது கம்ரடே கோடோவ் தானே" என கேட்கிறான். பிறகு அச்ச மிகுதியில், தன்னிடம் எல்லா பேப்பரும் இருப்பதாக கூறுகிறான்.

விவசாயியின் பேச்சை கேட்டபடியே வயலை நோக்கி பார்வையை செலுத்துகிறான் மித்யா. அப்போது காற்றில் பலூன் ஒன்று பறந்து மேலே வருகிறது. பெரிய பலூன். அதன் அடியே ஒரு செங்கொடி. அதில் ஸ்டாலின் உருவ படம். ஸ்டாலினின் உருவத்தை கண்டவுடன். புகைபிடிக்க வாய்த்த வத்திகுச்சி கையேடு தன்னையும் அறியாமல் மித்யாவின் கரங்கள் மேலே எழுகிறது. சல்யுட் செய்ய.

பிறகு ஏதோ யோசனையில் ஆழ்ந்த மித்ய. தன் சகாக்களை அழைத்து விவசாயியை கொல்ல சொல்லி சிக்னல் காட்டுகிறான். விவசாயி சுடபடுகிறான். காரில் மித்ய மற்றும் அவன் ஆட்களும் மீண்டும் கிளம்பு கின்றனர். ஒருவன் "என் கையில் பலத்த அடி" என திரும்ப திரும்ப கூறுகிறான். பிறகு, மித்யா மெதுவாக திரும்பி பார்க்கிறான். முகமெங்கும் ரத்த வெள்ளத்தில் இருக்கிறார் கோடோவ்!

அதுவரை தன் உணர்சிகளை கட்டுபடுத்தி வைத்திருந்த கோடோவ். இப்போது தேம்பி தேம்பி அழுகிறார். படத்தை பார்க்கும் யாவரையும் உறைய வைக்கும் காட்சி இது. மேலே வானில் பறக்கும் ஸ்டாலின் உருவ கோடி காட்டபடிகிறது. அதன் அருகில், வெகு தொலைவில் கார் சென்று கொண்டிருக்கிறது.

அடுத்த காட்சியில், குற்றவுணர்ச்கியில் மித்யா தன் கையை அறுத்து கொண்டு தற்கொலை செய்து கொள்கிறான். அவன் ஆன்மா அவன் உடலை விட்டு பிரிவதை அழகாக பதிவு செய்திருப்பார்கள். 

இறுதியாக, நதியா (கோடோவின் அன்பு மகள்) "சூரியனால் சுடப்பட்டவர்கள்.." என்கிற ரஷ்ய பாடலை பாடியவாறு செல்கிறாள். 

திரையில் பின்வரும் எழுத்துக்கள் தோன்றுகின்றன:
"கோடோவ் தான் செய்த குற்றங்களான ஜெர்மனிக்கு வேவு பார்த்தது போன்ற குற்றங்களுக்கு கையெழுத்திட்டு ஒப்புக்கொண்டார். பிறகு அவர் சுட்டு கொல்லபட்டார். பிறகு அவர் மனைவியும் சிறைபிடிக்க பட்டால், 1940ல் இறந்தாள். அவர்களுடைய மகள் நதியாவும் கைது செய்யபட்டால், பிறகு குருஷேவ் ஆட்சியில் விடுவிக்கபட்டால். தன் அம்மாவிடம் பெற்ற இசை அறிவு, அவளை பிறகு கஜகஸ்தானில் ஒரு இசை ஆசிரியராக மாற்றியது."
ஆங்கில பதிப்பில் கூடுதலாக ஒரு வரி சேர்த்துள்ளனர்: "இத்திரைப்டம் புரட்சி எனும் சூரியனால் சுட்டெரிக்கப் பட்டவர்களுக்கு சமர்ப்பணம்." (கொய்யால, உங்களுக்கு ஆஸ்கர் கொடுத்ததுள ஆச்சரியமே இல்ல!)

நான் மீண்டும் கூறிகொள்கிறேன். இது ஜோடிக்க பட்ட கதையாக இருக்கலாம். ஆனால், படம் எடுக்கப்பட்ட விதம் நன்றாக இருக்கும்.

Friday, 17 October 2014

மரணம்





"மரணத்தை பற்றி மனிதர்கள் பயப்படுவது

தெரியாத ஒன்றை  சந்திக்க போகிறோம்


என்பதால் அல்ல. 


இருப்பதை இழக்க வேண்டி வருமே 


என்கிற பயத்தால்!" 



-ஜே.கே.

பயிற்சியும் முயற்சியும்...



ஜேகே, Attention என்பதற்கும் Concentration என்பதற்கும் உள்ள வேறுபாட்டை தெளிவாக குறிபிடுகிறார். Concentration என்பது அதிக முயற்சிகளுடன் கவனிப்பது- கஷடப்பட்டு நிகழ்வது. Attention என்பது இயல்பாக செய்வது; எளிதாக கைகூடுவது. Concentration செய்தால் தலைவலி வருகிறது; கண்கள் எரிகிறது; கவனம் சிதறுகிறது.

படிக்கும்போது கவனம் Attention என்கிற இயல்புத் தன்மை நிகழ்ந்தால் பனிமலையில் அமர்ந்து கொண்டுகூட படிக்கலாம். அது இல்லாவிட்டால் அரண்மனையில் அமர்ந்துகூட வாசிக்க முடியாது.

யார் முழுகவனத்துடன் படிக்கிறார்களோ, அவர்கள் கைகளில் பக்கங்கள் வேகமாக புரள்கின்றன. எவ்வளவு படித்தாலும் தலை வலிப்பதில்லை, கண் சிவப்பதில்லை, மனம் சலிப்பதில்லை.

- வெ.இறையன்பு I.A.S

புத்தரும் முஹம்மதும்!!!

புத்தரும் முஹம்மதும்!!!

ஆசிரியர்: பீம் பிரபா காந்தி





முஹம்மத் கல்வி அறிவு அற்றவர்
புத்தர் ஒரு படித்த மேதை

முஹம்மதின் மக்கள் படிக்காத முட்டாள்கள்
புத்தரின் மக்கள் படித்த முட்டாள்கள்

முஹம்மதுக்கு தெரிந்தது இறைஞானம்
புத்தர் கண்டது மெய்ஞானம்

முஹம்மத் ஒரு வியாபாரி
புத்தர் ஒரு துறவி

முஹம்மத் ஒரு நாட்டின் தலைவர்
புத்தர் ராஜாங்கத்தையே துறந்த ஞானி

முஹம்மத் மார்கத்திற்கு அடிபணியுங்கள் என்கிறார்
புத்தர் உலக உயிர்கள் யாவிலும் அன்பு செலுத்துங்கள் என்கிறார்

முஹம்மத் அசைவ உணவை ஆதரிக்கிறார்
புத்தரோ சுத்த சைவம் 

முஹம்மத் ஏக இறைவனை வணங்க சொல்கிறார்
புத்தர் இறைவனை பற்றி பேசுவதையே தவிர்த்திருக்கிறார்

முஹம்மத் மறுபிறப்பை பற்றி எதுவும் கூறவில்லை 
புத்தர் உண்டு என்கிறார்

முஹம்மத் துறவு மார்கத்துக்கு எதிரானது என்கிறார்
புத்தர் பல தம்பதிகளை துறவு மேற்கொள்ள வைத்திருக்கிறார்

முஹம்மத் இறைவனுக்காக போர் புரிவது கடமை என்கிறார்
புத்தர் போரே வேண்டாம் என்கிறார்

முஹம்மத் பொய் பேசுபவர்களுக்கு நரகம் என்கிறார்
புத்தரும் அதையே கூறியுள்ளார்

முஹம்மத் சுவர்க்கம் நரகம் உண்டு என்கிறார்
புத்தரும் அவ்வாறே கூறுகிறார்

முஹம்மத் இதுவே இறுதியான மார்க்கம் என்கிறார்
புத்தர் தான் உபதேசித்தது இறுதியானது அல்ல என்கிறார்

முஹம்மத் இறைவனை நாடுங்கள் என்கிறார்
புத்தர் சுயமாக ஞானத்தை அடைய சொல்கிறார்

முஹம்மத் தன்னை இறுதி நபி என்கிறார்
புத்தர் தனக்கு எந்த சிறப்பும் இல்லை என்கிறார்

2. திருவிவிலியம் - ஒரு பின்நவீனத்துவ ஆய்வு

திருவிவிலியம் - ஒரு பின்நவீனத்துவ ஆய்வு

பகுதி: 2 

ஆசிரியர்: பீம் பிரபா காந்தி 



முன்னுரை: இவை  என் கண்ணோட்டங்களே. இறுதி உண்மை என்று எதுவும் என் பாக்கெட்டில் இல்லை.


தொடக்க நூல் (ஆதிஆகமம்)

அதிகாரம் 4 (1- 17)

ஆதாம் தன் மனைவி ஏவாளுடன் கூடி வாழ்ந்தான். அவள் கருவுற்றுக் காயினைப் பெற்றெடுத்தாள். அவள் ";ஆண்டவர் அருளால் ஆண் மகன் ஒருவனை நான் பெற்றுள்ளேன்" என்றாள். பின்பு அவள் அவன் சகோதரன் ஆபேலைப் பெற்றெடுத்தாள். ஆபேல் ஆடு மேய்ப்பவன் ஆனான். காயின் நிலத்தைப் பண்படுத்துபவன் ஆனான்.


++++++++++++++++++++++++++++++++++

ஆக, கதாபாத்திரங்கள் மொத்தம் 5 பேர் மட்டுமே (ஆண்டவரையும் சேர்த்து)

++++++++++++++++++++++++++++++++++

 ♥ சில நாள்கள் சென்றன. காயின் நிலத்தின் பலனிலிருந்து ஆண்டவருக்குக் காணிக்கை கொண்டு வந்தான். ஆபேலும் தன் மந்தையிலிருந்து கொழுத்த தலையீறுகளைக் கொண்டு வந்தான். ஆண்டவர் ஆபேலையும் அவன் காணிக்கையையும் கனிவுடன் கண்ணோக்கினார். ஆனால் காயினையும் அவன் காணிக்கையையும் அவர் கனிவுடன் கண்ணோக்கவில்லை. ஆகவே, காயின் கடுஞ்சினமுற்றான். அவன் முகம் வாடியது.

++++++++++++++++++++++++++++++++++

ஒருவேளை, ஆண்டவர் ஒரு அசைவ பிரியராக இருந்திருக்க கூடும் (கவனிக்க: முகம் என்று ஒன்று இருந்தால்தான் பாவனை காட்ட முடியும், கண் என்று ஒன்று இருந்தால்தான் பார்க்கமுடியும், முகம் இல்லை என்றால் கனிவு இல்லை, கண் இல்லை என்றால் பார்வை இல்லை.)

++++++++++++++++++++++++++++++++++

 ♥ ஆகவே, ஆண்டவர் காயினிடம், "நீ ஏன் சினமுற்றிருக்கிறாய்? உன் முகம் வாடி இருப்பது ஏன்?  நீ நல்லது செய்தால் உயர்வடைவாய் அல்லவா? நீ நல்லது செய்யாவிட்டால், பாவம் உன்மேல் வேட்கை கொண்டு உன் வாயிலில் படுத்திருக்கும். நீ அதை அடங்கி ஆளவேண்டும்" என்றார்.

++++++++++++++++++++++++++++++++++

(கவனிக்க: ஒருவருக்கு தொண்டை இருந்தால்தான் குரல் வரும் . வாய் இருந்தால்தான் அறிவுரை வழங்க முடியும். கண் இருந்தால்தான் எதிரில் இருபவரின் முகபாவனையை அறிய முடியும்.)

++++++++++++++++++++++++++++++++++

 ♥ காயின் தன் சகோதரன் ஆபேலிடம், "நாம் வயல்வெளிக்குப் போவோம்" என்றான். அவர்கள் வெளியில் இருந்தபொழுது, காயின் தன் சகோதரன் ஆபேலின் மேல் பாய்ந்து அவனைக் கொன்றான்.

++++++++++++++++++++++++++++++++++

பொறாமை மனித இயல்பு.

++++++++++++++++++++++++++++++++++

 ♥ ஆண்டவர் காயினிடம், "உன் சகோதரன் ஆபேல் எங்கே?" என்று கேட்டார். அதற்கு அவன், "எனக்குத் தெரியாது. நான் என்ன, என் சகோதரனுக்குக் காவலாளியோ?" என்றான். அதற்கு ஆண்டவர், "நீ என்ன செய்துவிட்டாய்! உன் சகோதரனின் இரத்தத்தின் குரல் மண்ணிலிருந்து என்னை நோக்கிக் கதறிக் கொண்டிருக்கிறது.

++++++++++++++++++++++++++++++++++

ஒருவன் செத்த பிறகு.............. அவன் குரல் ஆண்டவருக்கு கேட்கிறதாம். பூமியில் இருந்து வரும் செத்தவர்களின் குரலை கேட்கும் அமானுஷ்ய திறனா? அல்லது ஒருவேளை இந்திய புராணங்களில் குறிப்பிடப்படும் ஞான திரிஷ்டியா?

++++++++++++++++++++++++++++++++++

 ♥ இப்பொழுது, உன் கைகள் சிந்திய உன் சகோதரனின் இரத்தத்தைத் தன் வாய்திறந்து குடித்த மண்ணை முன்னிட்டு, நீ சபிக்கப்பட்டிருக்கின்றாய். நீ மண்ணில் பயிரிடும் பொழுது அது இனிமேல் உனக்குப் பலன் தராது. மண்ணுலகில் நீ நாடோடியாக அலைந்து திரிவாய்" என்றார்.

++++++++++++++++++++++++++++++++++

"இரத்தத்தின் குரல் மண்ணிலிருந்து" ஆண்டவரை நோக்கி கதரியதே.  அதே மண் அதே வாய் கொண்டு  "இரத்தத்தைத் தன் வாய்திறந்து" குடித்ததாம்.

++++++++++++++++++++++++++++++++++

 ♥ காயின் ஆண்டவரிடம், "எனக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை என்னால் தாங்க முடியாததாக இருக்கின்றது. இன்று நீர் என்னை இம்மண்ணிலிருந்து துரத்தியிருக்கின்றீர்; உமது முன்னிலையினின்று நான் மறைக்கப்பட்டுள்ளேன். மண்ணுலகில் நான் நாடோடியாக அலைந்து திரிய வேண்டியுள்ளது. என்னைக் காண்கின்ற எவனும் என்னைக் கொல்வானே!" என்றான்.

++++++++++++++++++++++++++++++++++

" உமது முன்னிலையினின்று நான் மறைக்கப்பட்டுள்ளேன்."
- அதாவது ஆண்டவரின் ஆட்சிக்கு உட்பட்ட எல்லைக்கு வெளியே நாடுகடத்த படுதல்.


"என்னைக் காண்கின்ற.....எவனும்..... என்னைக் கொல்வானே!"
- கவனிக்க: இருப்பதே மொத்தம் (5 - 1 = 4) நான்கு பேர்தான். இதில் இவர் தனது பெற்றோர்களை குறிபிடுகின்றாரா? அல்லது ஆண்டவணையா?

++++++++++++++++++++++++++++++++++

 ♥ ஆண்டவர் அவனிடம் "அப்படியன்று; காயினைக் கொல்கின்ற எவனும் ஏழு முறை பழி வாங்கப்படுவான்" என்று சொல்லி, காயினைக் கண்டு பிடிக்கும் எவனும் அவனைக் கொல்லாமல் இருக்க ஆண்டவர் அவன் மேல் ஓர் அடையாளம் இட்டார்.

++++++++++++++++++++++++++++++++++

"காயினைக் கண்டு பிடிக்கும்.........எவனும்............அவனைக் கொல்லாமல் இருக்க...."
- கவனிக்க: இருப்பதே மொத்தம் (5 - 1 = 4) நான்கு பேர்தான். இதில் இவர் அவனது பெற்றோர்களை குறிபிடுகின்றாரா? இல்லை எனில் அந்த "எவனும்" எனும் மற்றவர்கள் யார் ?

++++++++++++++++++++++++++++++++++

 ♥ பின்னர் காயின் ஆண்டவர் திருமுன்னை விட்டுச் சென்று ஏதேனுக்குக் கிழக்கே இருந்த நோது நாட்டில் குடியேறினான். காயின் தன் மனைவியுடன் கூடி வாழ, அவளும் கருவுற்று ஏனோக்கைப் பெற்றெடுத்தாள். அப்பொழுது காயின் ஒரு நகரத்தை நிறுவி, அதற்குத் தன் மகன் ஏனோக்கின் பெயரை வைத்தான்.

++++++++++++++++++++++++++++++++++

"காயின் தன்....மனைவியுடன்.....கூடி வாழ...."
கவனிக்க: உலகின் முதல் மனிதனின் மருமகள் யாராக இருப்பாள்?! அவளை படைத்தது யார்? திடீரென எங்கிருந்து வந்தாள்?  அவள் பெற்றோர் யார்?

++++++++++++++++++++++++++++++++++

முடிவுரை; ஆண்டவர்  என்றால் கர்த்தர் மட்டும் அல்ல,  "அரசன்" எனவும் பொருள்படும் .

The Lord(n): someone or something having power, authority, or influence; a master or ruler. Google Translator

1. திருவிவிலியம் - ஒரு பின்நவீனத்துவ ஆய்வு

திருவிவிலியம் - ஒரு பின்நவீனத்துவ ஆய்வு

பகுதி: 1

ஆசிரியர்: பீம் பிரபா காந்தி 



தொடக்க நூல் (ஆதிஆகமம்)

அதிகாரம் 4


1 ஆதாம் தன் மனைவி ஏவாளுடன் கூடி வாழ்ந்தான். அவள் கருவுற்றுக் காயினைப் பெற்றெடுத்தாள். அவள் ";ஆண்டவர் அருளால் ஆண் மகன் ஒருவனை நான் பெற்றுள்ளேன்" என்றாள்.

2 பின்பு அவள் அவன் சகோதரன் ஆபேலைப் பெற்றெடுத்தாள். ஆபேல் ஆடு மேய்ப்பவன் ஆனான். காயின் நிலத்தைப் பண்படுத்துபவன் ஆனான்.
.
.
.
.
.
.
.
.
8 காயின் தன் சகோதரன் ஆபேலிடம், "நாம் வயல்வெளிக்குப் போவோம்" என்றான். அவர்கள் வெளியில் இருந்தபொழுது, காயின் தன் சகோதரன் ஆபேலின் மேல் பாய்ந்து அவனைக் கொன்றான்.
.
.
.
.
.
.
.
25 ஆதாம் மீண்டும் தன் மனைவியுடன் கூடி வாழ, அவளும் மகன் ஒருவனைப் பெற்று அவனுக்குச் சேத்து என்று பெயரிட்டாள். "காயின் ஆபேலைக் கொன்றதால் அவனுடைய இடத்தில் இன்னொருவனைக் கடவுள் வைத்தருளினார்" என்றாள்.
.
.
.

அதிகாரம் 5

.
.
.
.

3 ஆதாமுக்கு நூற்று முப்பது வயதானபோது, அவனுக்கு அவன் சாயலிலும் உருவிலும் மகன் ஒருவன் பிறந்தான்; அவனுக்குச் சேத்து என்று பெயரிட்டான்.

4 சேத்து பிறந்தபின் ஆதாம் எண்ணூறு ஆண்டுகள் வாழ்ந்தான். ஆதாமுக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.

5 மொத்தம் தொள்ளாயிரத்து முப்பது ஆண்டுகள் வாழ்ந்தபின் ஆதாம் இறந்தான்.
.
.
.
.
.
*****************************************************************************

ஆக, ஆதாம் வாழ்ந்தது மொத்தம்  930 வருடங்கள்!


ஆக, அவருக்கு 130 வயது ஆனபிறகுதான் மூன்றாவது மகனே பிறக்கிறான்!


ஆக, 130 வருடங்களுக்கு பிறகே அவருக்கு பல "புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்."!