திருவிவிலியம் - ஒரு பின்நவீனத்துவ ஆய்வு
பகுதி: 2
ஆசிரியர்: பீம் பிரபா காந்தி
முன்னுரை: இவை என் கண்ணோட்டங்களே. இறுதி உண்மை என்று எதுவும் என் பாக்கெட்டில் இல்லை.
தொடக்க நூல் (ஆதிஆகமம்)
அதிகாரம் 4 (1- 17)
♥ ஆதாம் தன் மனைவி ஏவாளுடன் கூடி வாழ்ந்தான். அவள் கருவுற்றுக் காயினைப் பெற்றெடுத்தாள். அவள் ";ஆண்டவர் அருளால் ஆண் மகன் ஒருவனை நான் பெற்றுள்ளேன்" என்றாள். பின்பு அவள் அவன் சகோதரன் ஆபேலைப் பெற்றெடுத்தாள். ஆபேல் ஆடு மேய்ப்பவன் ஆனான். காயின் நிலத்தைப் பண்படுத்துபவன் ஆனான்.
++++++++++++++++++++++++++++++++++
ஆக, கதாபாத்திரங்கள் மொத்தம் 5 பேர் மட்டுமே (ஆண்டவரையும் சேர்த்து)
++++++++++++++++++++++++++++++++++♥ சில நாள்கள் சென்றன. காயின் நிலத்தின் பலனிலிருந்து ஆண்டவருக்குக் காணிக்கை கொண்டு வந்தான். ஆபேலும் தன் மந்தையிலிருந்து கொழுத்த தலையீறுகளைக் கொண்டு வந்தான். ஆண்டவர் ஆபேலையும் அவன் காணிக்கையையும் கனிவுடன் கண்ணோக்கினார். ஆனால் காயினையும் அவன் காணிக்கையையும் அவர் கனிவுடன் கண்ணோக்கவில்லை. ஆகவே, காயின் கடுஞ்சினமுற்றான். அவன் முகம் வாடியது.
++++++++++++++++++++++++++++++++++
ஒருவேளை, ஆண்டவர் ஒரு அசைவ பிரியராக இருந்திருக்க கூடும் (கவனிக்க: முகம் என்று ஒன்று இருந்தால்தான் பாவனை காட்ட முடியும், கண் என்று ஒன்று இருந்தால்தான் பார்க்கமுடியும், முகம் இல்லை என்றால் கனிவு இல்லை, கண் இல்லை என்றால் பார்வை இல்லை.)
++++++++++++++++++++++++++++++++++♥ ஆகவே, ஆண்டவர் காயினிடம், "நீ ஏன் சினமுற்றிருக்கிறாய்? உன் முகம் வாடி இருப்பது ஏன்? நீ நல்லது செய்தால் உயர்வடைவாய் அல்லவா? நீ நல்லது செய்யாவிட்டால், பாவம் உன்மேல் வேட்கை கொண்டு உன் வாயிலில் படுத்திருக்கும். நீ அதை அடங்கி ஆளவேண்டும்" என்றார்.
++++++++++++++++++++++++++++++++++
(கவனிக்க: ஒருவருக்கு தொண்டை இருந்தால்தான் குரல் வரும் . வாய் இருந்தால்தான் அறிவுரை வழங்க முடியும். கண் இருந்தால்தான் எதிரில் இருபவரின் முகபாவனையை அறிய முடியும்.)
++++++++++++++++++++++++++++++++++♥ காயின் தன் சகோதரன் ஆபேலிடம், "நாம் வயல்வெளிக்குப் போவோம்" என்றான். அவர்கள் வெளியில் இருந்தபொழுது, காயின் தன் சகோதரன் ஆபேலின் மேல் பாய்ந்து அவனைக் கொன்றான்.
++++++++++++++++++++++++++++++++++
பொறாமை மனித இயல்பு.
++++++++++++++++++++++++++++++++++♥ ஆண்டவர் காயினிடம், "உன் சகோதரன் ஆபேல் எங்கே?" என்று கேட்டார். அதற்கு அவன், "எனக்குத் தெரியாது. நான் என்ன, என் சகோதரனுக்குக் காவலாளியோ?" என்றான். அதற்கு ஆண்டவர், "நீ என்ன செய்துவிட்டாய்! உன் சகோதரனின் இரத்தத்தின் குரல் மண்ணிலிருந்து என்னை நோக்கிக் கதறிக் கொண்டிருக்கிறது.
++++++++++++++++++++++++++++++++++
ஒருவன் செத்த பிறகு.............. அவன் குரல் ஆண்டவருக்கு கேட்கிறதாம். பூமியில் இருந்து வரும் செத்தவர்களின் குரலை கேட்கும் அமானுஷ்ய திறனா? அல்லது ஒருவேளை இந்திய புராணங்களில் குறிப்பிடப்படும் ஞான திரிஷ்டியா?
++++++++++++++++++++++++++++++++++♥ இப்பொழுது, உன் கைகள் சிந்திய உன் சகோதரனின் இரத்தத்தைத் தன் வாய்திறந்து குடித்த மண்ணை முன்னிட்டு, நீ சபிக்கப்பட்டிருக்கின்றாய். நீ மண்ணில் பயிரிடும் பொழுது அது இனிமேல் உனக்குப் பலன் தராது. மண்ணுலகில் நீ நாடோடியாக அலைந்து திரிவாய்" என்றார்.
++++++++++++++++++++++++++++++++++
"இரத்தத்தின் குரல் மண்ணிலிருந்து" ஆண்டவரை நோக்கி கதரியதே. அதே மண் அதே வாய் கொண்டு "இரத்தத்தைத் தன் வாய்திறந்து" குடித்ததாம்.
++++++++++++++++++++++++++++++++++♥ காயின் ஆண்டவரிடம், "எனக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை என்னால் தாங்க முடியாததாக இருக்கின்றது. இன்று நீர் என்னை இம்மண்ணிலிருந்து துரத்தியிருக்கின்றீர்; உமது முன்னிலையினின்று நான் மறைக்கப்பட்டுள்ளேன். மண்ணுலகில் நான் நாடோடியாக அலைந்து திரிய வேண்டியுள்ளது. என்னைக் காண்கின்ற எவனும் என்னைக் கொல்வானே!" என்றான்.
++++++++++++++++++++++++++++++++++
" உமது முன்னிலையினின்று நான் மறைக்கப்பட்டுள்ளேன்."
- அதாவது ஆண்டவரின் ஆட்சிக்கு உட்பட்ட எல்லைக்கு வெளியே நாடுகடத்த படுதல்.
"என்னைக் காண்கின்ற.....எவனும்..... என்னைக் கொல்வானே!"
- கவனிக்க: இருப்பதே மொத்தம் (5 - 1 = 4) நான்கு பேர்தான். இதில் இவர் தனது பெற்றோர்களை குறிபிடுகின்றாரா? அல்லது ஆண்டவணையா?
++++++++++++++++++++++++++++++++++♥ ஆண்டவர் அவனிடம் "அப்படியன்று; காயினைக் கொல்கின்ற எவனும் ஏழு முறை பழி வாங்கப்படுவான்" என்று சொல்லி, காயினைக் கண்டு பிடிக்கும் எவனும் அவனைக் கொல்லாமல் இருக்க ஆண்டவர் அவன் மேல் ஓர் அடையாளம் இட்டார்.
++++++++++++++++++++++++++++++++++
"காயினைக் கண்டு பிடிக்கும்.........எவனும்............அவனைக் கொல்லாமல் இருக்க...."
- கவனிக்க: இருப்பதே மொத்தம் (5 - 1 = 4) நான்கு பேர்தான். இதில் இவர் அவனது பெற்றோர்களை குறிபிடுகின்றாரா? இல்லை எனில் அந்த "எவனும்" எனும் மற்றவர்கள் யார் ?
++++++++++++++++++++++++++++++++++♥ பின்னர் காயின் ஆண்டவர் திருமுன்னை விட்டுச் சென்று ஏதேனுக்குக் கிழக்கே இருந்த நோது நாட்டில் குடியேறினான். காயின் தன் மனைவியுடன் கூடி வாழ, அவளும் கருவுற்று ஏனோக்கைப் பெற்றெடுத்தாள். அப்பொழுது காயின் ஒரு நகரத்தை நிறுவி, அதற்குத் தன் மகன் ஏனோக்கின் பெயரை வைத்தான்.
++++++++++++++++++++++++++++++++++
No comments:
New comments are not allowed.