Tuesday, 27 October 2015

Burnt by the Sun​(1994): சூரியனால் சுட்டெரிக்க பட்டவர்கள்


Burnt by the Sun(1994): சூரியனால் சுட்டெரிக்க பட்டவர்கள்


முதலில் ஒன்றை தெரிவித்து கொள்கிறேன். இந்த படத்தை பற்றி தமிழில் எழுதும் முதல் நபர் நான் தான்.




சினிமா என்பது பொய்யும் பேசும், உண்மையும் பேசும். வரலாற்று ஆசிரியர்களை போன்றதுதான் சினிமா. அவர்களுக்கு பிடித்தவாறு சமைக்க படுகிறது. இப்படி சொல்வதால், இந்த படத்தை பற்றி நான் கழுவி கழுவி ஊற்ற போவதாக யாரும் எண்ண வேண்டாம். படத்தை படமாக பாப்போம். வரலாற்று பாடமாக அல்ல.

இது ஒரு ரஷ்ய படம். 3 வருடங்களாக இதை காண வேண்டும் என்கிற ஆசை இந்த வாரம்தான் கைகூடியது. படம் வெளிவந்த ஆண்டு, 1994. அதாவது, சோவியத் ரஷ்ய சிதைந்து வெறும் ரஷ்ய ஆன பிறகு. ஊழல் மிகுந்த முதலாளித்துவ ரஷ்யவாக அது மாறிய பிறகு. அப்படிப்பட்ட சமயத்தில் வந்த ஒரு சரித்திர திரைப்படம்தான் "சூரியனால் சுட்டெரிக்க பட்டவர்கள்" என பொருள்படும் Burnt by the Sun. படம் ரஷ்ய ஸ்டாலின் ஆட்சியை விமர்சிப்பதாலோ என்னவோ (என்னவோ என்ன? அதுதான்) இதற்க்கு சிறந்த அயல் நாட்டு சினிமாவுக்கான ஆஸ்கரை அமெரிக்கா வழங்கியது.

படத்தை இயக்கி முக்கிய கதாபத்திரத்தில் நடித்திருப்பவர் நிகிடா மிக்கலோவ் என்பவர். இவர் ஒரு ஒளிபதிவாளரும் கூட. ஆனால், இந்த படத்துக்கு இவர் ஒளிப்பதிவு செய்யவில்லை. படத்தில் இவருடைய சொந்த மகளே மகளாக நடித்துள்ளார். அதனால் இவர்கள் இருவருக்கிடையான காட்சிகள் கவிதையாக வந்துள்ளன.


கதைக்கு செல்வோம்.

அது ஒரு கோடை காலம். வருடம் 1936. 

ராணுவ அதிகாரி கோடோவ், ஒரு போர் வீரர். தனது மனைவி மற்றும் குழந்தையுடன் கோடையை கழிக்க பான்யா என்ற இடத்திற்கு வந்துள்ளார். அதே இடத்திற்கு அவர் மனைவியுடைய பழைய காதலனும் வருகிறான். திரும்பி வந்துள்ள காதலனை கோடோவ் குடும்பம் விருந்தோம்பலுடன் நன்றாக கவனிக்கிறது. இந்த சமயத்தில்தான் ஒரு ரகசியம் வெளிவருகிறது. வந்தவனுடைய நோக்கம் மனைவியை காண்பதல்ல. கணவனை கைது செய்வது!

ஏன்? எதற்கு? எதனால்?

கோடோவ் ரஷ்ய சர்வாதிகாரி ஸ்டாலினை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக. ஆனால், இது நிருபிக்கப்படாத ஒன்று.

ஒரு கட்டத்தில், மித்யா என்கிற அந்த பழைய காதலன், இது பற்றி கொடோவிடம், "உன்னால்தான் நான் ராணுவத்தில் வலுகட்டாயமாக வேறு பிரிவுக்கு மாற்றப்பட்டேன். அந்த சமயத்தில் நீ என் காதலியையும் அடைத்துவிட்டாய். இனி எனக்கு வாழ்க்கையே இல்லாமல் செய்துவிட்டாய். உன்னை பழிவாங்காமல் விடமாட்டேன்" என்பான்.

அதற்க்கு கோடோவ் அவன் முகத்தில் ஒரு குத்து விட்டு, "நீ ஒரு வேசி. பாரிசில் நம் படையினறியே காட்டி கொடுத்தவன் தானே. உன்னை நான் நம்ப மாட்டேன். என்ன இருந்தாலும் ஸ்டாலினுடனான என் நட்பு நாடறிந்தது. எனக்கு எதுவும் ஆகாது" என பதிலுக்கு திட்டுகிறார். இவர்களின் பேச்சுக்கு இடையில் வரும் கோடோவ்-வின் மகள் நதியாவிடம் இருவரும் நண்பர்கள் போல நடிக்கின்றனர். பிறகு கோடோவ் ரகசியமாக மித்யாவிடம் மீண்டும் கேட்கிறார்: "நாளைக்கா? சரி பார்ப்போம்". 

மறுநாள், போர் வீரரான கோடோவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அந்த ஊர் மாணவர்கள் வருகின்றனர். அப்போது அங்கே அவரை கைது செய்ய ஸ்டாலினின் ஆட்கள் வருகின்றனர். தர்ம சங்கடமான நிலையில், குடும்பத்தினரிடம் பொய் சொல்லிவிட்டு காரில் ஏறுகிறார் கோடோவ்.

காரில் ஏறிய கணம் முதல் ஏதோ உல்லாச பயணத்திற்கு செல்பவரை போல, "சரி, அடுத்து நாம் எங்கே செல்கிறோம் ஹோடெளுக்கா.." யாரும் பதில் அளிக்கவில்லை. "ஸ்டாலினை சந்தித்த உடன் முதலில் உங்களை பணி நீக்கம் செய்ய சொல்ல போகிறேன்", என்றெல்லாம் வீர வசனம் பேசுவார்.

பிறகு வழி நடுவே யாரோ விவசாயி ட்ராக்டரை நிறுத்தி வைத்திருப்பான். அவனிடம் மித்யா விசாரித்ததில் வண்டி கோளாறு என்பான். இந்த இடைபட்ட நேரத்தில் கோடோவ் காரில் இருந்து தப்பிக்க முயல்கிறார். அங்கே உள்ளே சண்டை நடக்க வெளியே மித்யா விவசாயியை வண்டியை நெருங்க விடாமல் தடுக்கிறான். சத்தத்தை கேட்ட விவசாயி "அது கம்ரடே கோடோவ் தானே" என கேட்கிறான். பிறகு அச்ச மிகுதியில், தன்னிடம் எல்லா பேப்பரும் இருப்பதாக கூறுகிறான்.

விவசாயியின் பேச்சை கேட்டபடியே வயலை நோக்கி பார்வையை செலுத்துகிறான் மித்யா. அப்போது காற்றில் பலூன் ஒன்று பறந்து மேலே வருகிறது. பெரிய பலூன். அதன் அடியே ஒரு செங்கொடி. அதில் ஸ்டாலின் உருவ படம். ஸ்டாலினின் உருவத்தை கண்டவுடன். புகைபிடிக்க வாய்த்த வத்திகுச்சி கையேடு தன்னையும் அறியாமல் மித்யாவின் கரங்கள் மேலே எழுகிறது. சல்யுட் செய்ய.

பிறகு ஏதோ யோசனையில் ஆழ்ந்த மித்ய. தன் சகாக்களை அழைத்து விவசாயியை கொல்ல சொல்லி சிக்னல் காட்டுகிறான். விவசாயி சுடபடுகிறான். காரில் மித்ய மற்றும் அவன் ஆட்களும் மீண்டும் கிளம்பு கின்றனர். ஒருவன் "என் கையில் பலத்த அடி" என திரும்ப திரும்ப கூறுகிறான். பிறகு, மித்யா மெதுவாக திரும்பி பார்க்கிறான். முகமெங்கும் ரத்த வெள்ளத்தில் இருக்கிறார் கோடோவ்!

அதுவரை தன் உணர்சிகளை கட்டுபடுத்தி வைத்திருந்த கோடோவ். இப்போது தேம்பி தேம்பி அழுகிறார். படத்தை பார்க்கும் யாவரையும் உறைய வைக்கும் காட்சி இது. மேலே வானில் பறக்கும் ஸ்டாலின் உருவ கோடி காட்டபடிகிறது. அதன் அருகில், வெகு தொலைவில் கார் சென்று கொண்டிருக்கிறது.

அடுத்த காட்சியில், குற்றவுணர்ச்கியில் மித்யா தன் கையை அறுத்து கொண்டு தற்கொலை செய்து கொள்கிறான். அவன் ஆன்மா அவன் உடலை விட்டு பிரிவதை அழகாக பதிவு செய்திருப்பார்கள். 

இறுதியாக, நதியா (கோடோவின் அன்பு மகள்) "சூரியனால் சுடப்பட்டவர்கள்.." என்கிற ரஷ்ய பாடலை பாடியவாறு செல்கிறாள். 

திரையில் பின்வரும் எழுத்துக்கள் தோன்றுகின்றன:
"கோடோவ் தான் செய்த குற்றங்களான ஜெர்மனிக்கு வேவு பார்த்தது போன்ற குற்றங்களுக்கு கையெழுத்திட்டு ஒப்புக்கொண்டார். பிறகு அவர் சுட்டு கொல்லபட்டார். பிறகு அவர் மனைவியும் சிறைபிடிக்க பட்டால், 1940ல் இறந்தாள். அவர்களுடைய மகள் நதியாவும் கைது செய்யபட்டால், பிறகு குருஷேவ் ஆட்சியில் விடுவிக்கபட்டால். தன் அம்மாவிடம் பெற்ற இசை அறிவு, அவளை பிறகு கஜகஸ்தானில் ஒரு இசை ஆசிரியராக மாற்றியது."
ஆங்கில பதிப்பில் கூடுதலாக ஒரு வரி சேர்த்துள்ளனர்: "இத்திரைப்டம் புரட்சி எனும் சூரியனால் சுட்டெரிக்கப் பட்டவர்களுக்கு சமர்ப்பணம்." (கொய்யால, உங்களுக்கு ஆஸ்கர் கொடுத்ததுள ஆச்சரியமே இல்ல!)

நான் மீண்டும் கூறிகொள்கிறேன். இது ஜோடிக்க பட்ட கதையாக இருக்கலாம். ஆனால், படம் எடுக்கப்பட்ட விதம் நன்றாக இருக்கும்.

No comments:

Post a Comment